காகிதமில்லா வங்கி என்பது விரைவில் சாத்தியமாகும்: மோடி பேச்சு
Posted: Fri,14 Apr 2017 01:01:09 GMT
மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில், ஆதார் அட்டை மூலம் பணப்பரிவர்தனை செய்யும் கைபேசி செயலியை அறிமுகப்படுத்தி பேசிய மோடி, ”ஏராளமான மக்கள் செய்த தியாகம் காரணமாக நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. ஏராளமான மக்கள் மகிழ்ச்சியுடன் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்தனர். அவர்களின் கனவை நினைவாக்க வேண்டும். தீக்சாபூமிக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இடத்தில் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தியது பெருமையளிக்கிறது. பீம் ஆப் அம்பேத்கருக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. அம்பேத்கர் கனவை நாம் இணைந்து நிறைவேற்றுவோம்.
இன்னும் அதிக நகரங்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனையை நோக்கி செல்கின்றன. குறைந்தளவு பணம் பயன்பாடு என்ற இலக்கை நோக்கி செல்ல வேண்டும். அதிகளவு பணம் பயன்படுத்துவது என்பது அதிக பிரச்னையை ஏற்படுத்தும். இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிம் ஆப் அதிகம் பேருக்கு நேர்மையான பாதிப்பை ஏற்படுத்தும்.
மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். பணம் அச்சிடுவதற்கு அதிக பணம் செலவாகிறது. ஏ.டி.எம்., பாதுகாப்பிற்காக 5 போலீசார் நிறுத்தப்படுகின்றனர். உங்களின் மொபைல்போன்களே உங்களின் வங்கியாக இருக்கும். மக்கள் தற்போது ஆதார் பற்றி பேசுகின்றனர். காகிதமில்லா வங்கி என்பது விரைவில் சாத்தியமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)