மூலத்தை முற்றிலும் நீக்கும் துத்தி
Posted: Wed,12 Apr 2017 03:32:35 GMT
உடல் சூடு சம்மந்தமான ஆனைத்து நோய்களையும் தீர்க்கவல்லது துத்தி. துத்தியின் இலை, பூ, வேர் என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் வாய்ந்தது.
மலச்சிக்கல் இருந்தால் அது உடலில் பல நோய்களை வரவழைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது 90% மக்கள் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் உண்மை. காலநிலை மாறுபாடு, புதிய உணவு வகைகள், வேலை செய்வதில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகிய காரணிகளால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இதனால் உடல் சூடு, மூலம், ஆசனவாய் வெடிப்பு, எரிச்சல் உள்ளிட்ட பல நோய்கள் உண்டாகின்றன.
இவையனைத்தும் போக்கும் அருமருந்து துத்தி ஆகும். கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு துத்தி இலை எளிதில் கிடைக்கும் ஆனால் நகர்புறங்களில் வசிப்பவர்கள், துத்தி இலைப்பொடியை பயன்படுத்தலாம். துத்தி இலையை நிழலில் உலர்த்தி, இடித்து வைத்துக்கொண்டு காலை மாலை என இருவேளை இளம் சுடான நீரில் கலந்து குடிந்து வந்தால் மலச்சிக்கல் மற்றும் மூல நோயை முழுமையாக நீங்கும்.
  • Share
  • 0 Comment(s)