கோடைகால நோய்களை குணமாக்கும் தும்பை
Posted: Tue,11 Apr 2017 01:01:31 GMT
சாதாரணமாக தெருக்களிலும், மானாவாரி நிலங்களிலும் காணப்படும் தாவரம் தும்பை. இச்செடியின் பூக்களை விநாயகர் வழிபாட்டுக்கு பயன்படுத்துவது வழக்கம்.
கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை குணமாக்கவல்லது இந்த தும்பை செடி. இலை, பூ, வேர் என இச்செடியின் அனைத்து பாகங்களும் மருத்து குணம் வாய்ந்தவை.
தும்பை இலையை கசக்கி சாறு எடுத்து 10 சொட்டுகள், காலை மாலை என இருவேளை 15 நாட்கள் நாக்கில் விட்டு வந்தால் வெயிலால் ஏற்படும் ஒவ்வாமை நோய்கள் நீங்கும்.
தும்பைச் செடியை வேருடன் பிடிங்கி, வேரில் உள்ள மண் போகும்படி நீரில் கழுவி விட்டு, சுத்தமான நீரில் இட்டுநன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்க ஒற்றைத் தலைவலி குணமாகும்.
வெயில் காலத்தில் ஏற்படும் நாவறட்சி, வாய் உலர்ந்தல் போன்ற நோய்களை போக்க தும்பைப்பூவைத் துணியில் கசக்கிப் பிழிந்து 25 மில்லி அளவு சாறு எடுத்து, தேன் கலந்து குடிக்கலாம்
கோடை காலத்தில் தோலில் ஏற்படும் கொப்புளம், நமைச்சல், சிரங்குகள் போன்ற நோய்கள் குணமாக தும்பை இலைகளை அரைத்து, மேல் பூச்சாகப் பூசி வர விரைவில் குணமடையலாம்.
  • Share
  • 0 Comment(s)