200 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் மட்டுமே கிடைக்கும்
Posted: Sat,08 Apr 2017 04:41:05 GMT
கடந்த ஆண்டு, கறுப்பு பணம் மற்றும் கள்ளப்பணம் ஆகியவற்றை ஒழிக்கும் பொருட்டு 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டன. அதன்பிறகு புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் பணம் எடுப்பதில் இருந்த கெடுபிடிகள் காரணாக மக்கள் அல்லலுக்கு உள்ளாகினர்.
தற்போது நிலமை சீரடைந்து விட்டாலும், 2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சில்லறை தட்டுப்பாட்டை போக்கும் விதத்தில் புதிய 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த 200 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் இயந்திரத்தில் புழக்கத்தில் விடுவதற்காக ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றம் செய்ய வேண்டி இருப்பதால் அதுவரை 200 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் மட்டுமே வழங்கப்படும் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
  • Share
  • 0 Comment(s)