2000 ரூபாய் நோட்டு பற்றிய வதந்தி: பதிலளித்த அமைச்சர்
Posted: Thu,06 Apr 2017 06:35:08 GMT
1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்ட பிறகு புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த 2000 ரூபாய் நோட்டுகளும் விரைவில் திரும்பப் பெறப்படும் என்று அதிகாரப்பூர்வமன்ற செய்திகள் வெளியாகி வருகிறது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கும் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு , “புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 2,000 ரூபாய் நோட்டை, செல்லாததாக அறிவிக்கும் எந்த திட்டமும் இல்லை. இது தொடர்பாக, சிலர் வீணான புரளியை பரப்பி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்த, 2,000 ரூபாய் நோட்டில் புழக்கத்தில் விடப்படும் கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்க, பல்வேறு அமைப்புகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன, என்றும் தெரிவித்துள்ளார்
  • Share
  • 0 Comment(s)