பதவி உயர்வு ஆனால் சம்பளம் குறைவு
Posted: Tue,04 Apr 2017 04:38:50 GMT
டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரைஸ் மிஸ்டிரி மற்றும் ரத்தன் டாடா இடையே எற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, டாடா குழுமத்தில் இருந்து சைரஸ் மிஸ்ட்ரி வெளியேறினார். அதன் பிறகு டாடா குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகர் நியமிக்கப்பட்ட்டுள்ளார். டாடா குடும்பத்தை சாராத ஒருவருக்கு டாடா குழுமத்தின் தலைவர் பதவி கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்துக்கு தலைவர் பதவியை ஏற்றிருக்கும் சந்திரசேகர், இதற்கு முன் டாடா குழுமத்தின் ஒரு அங்கமான, பென்பொருள் நிறுவனமான டிசிஎஸ்சின் தலைவராக இருந்தார். டிசிஎஸ்சின் தலைவராக இருந்தபோது 25.6 கோடியை ஆண்டு சம்பளமாகவும், 10 கோடிவரை ஊக்கத்தொகையும் பெற்று வந்தார்.
ஆனால் டாடா குழுமத்தின் தலைவருக்கு அவ்வளவு சம்பளம் கிடையாது. இதற்கு முன் டாடா குழும தலைவராக இருந்த சைரஸ் மிஸ்டிரி ஆண்டு சம்பளமாக 16 கோடிகளை பெற்றுவந்தார். தற்போது டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள சந்திரசேகருக்கு 14 கோடிகள் ஆண்டு சம்பளம் வழங்கப்படும் எனத்தெரிகிறது.
  • Share
  • 0 Comment(s)