ஜியோவுக்கு போட்டியாக பிஎஸ்என்எல்
Posted: Sat,01 Apr 2017 11:50:01 GMT
ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் கடந்த ஆறு மாதம் இலவச சேவைகளை வழங்கி வந்தது. இந்நிலையில் மேலும் 15 நாட்களுக்கு இலவச சேவையை நீட்டித்துள்ளது. அதன் பிறகு குறைந்த பட்ச கட்டணத்தில் சலுகைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜியோவுக்கு போட்டியாக பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், வாடிக்கையாளார்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. மாதம் ரூ249 கட்டினால் தினமும் 10 ஜிபி டேட்டா என மாதம் 300 ஜிபி டேட்டவை கொடுக்கிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.
இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிகபட்ச டேட்டா மட்டுமின்றி அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் தினமும் இரவு 9.00 மணி முதல் காலை 7.00 மணி வரை வழங்கப்படுகிறது. ஞாயிற்று கிழமைகளிலும் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி இந்த சலுகையை பெறலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Share
  • 0 Comment(s)